ஜிசாட்-31 செயற்கைக்கோள் பிப்ரவரி 6ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது

தகவல் தொடர்பு வசதிக்கு பயன்படும் ஜிசாட்-31 செயற்கைக்கோள் வரும் 6-ந் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.

தகவல் தொடர்பு வசதிகளை பெருக்கும் வகையில், அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் 40வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள் வரும் 6-ந் தேதி பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட ஜிசாட்-31 செயற்கைகோள் மூலம், விசாட் நெட்வொர்க், டிஜிட்டல் செயற்கைகோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கு பயன்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Exit mobile version