அரசு பணியில் இருப்பதை மறைத்து குரூப்-1 தேர்வு எழுதிய விவகாரம்

அரசு பணியில் இருப்பதை மறைத்து குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களை நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் குரூப்-1 தேர்வை நடத்தியது. இதில் வெற்றி பெற்ற 5 பேர் தங்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version