திருமண ஊர்வலத்தில், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பெண் வீட்டார் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கி கொண்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் சூரியா பேட்டையில் திருமண விழாவை ஒட்டி, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடை பெற்றது. ஊர்வலத்திற்கு தேவையான ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்திருந்தனர்.
ஆனால் ஊர்வலத்திற்காக பெண் வீட்டார் பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்யவில்லை எனகூறி, மாப்பிள்ளை வீட்டார் மது போதையில் தள்ளாடிய நிலையில் குற்றம் சாட்டினர். அந்த பகுதியில் திருமணம் போன்ற நிகழ்சிகளில் பெண்களும் ஆண்களுக்கு இனையாக மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் ஆண், பெண் வித்தியாசம் இன்றி இரு தரப்பினரும் கடுமையாக மோதி கொண்டனர்.
அப்போது நாற்காலிகள்,சமையல் பாத்திரங்கள் ஆகியவை உட்பட கையில் கிடைத்த பொருட்களால் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து கிராம பெரியவர்கள் தலையிட்டு அவர்களுக்கு இடையே சமாதானம் செய்துவைத்தனர்..