செஞ்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகாவிஷ்ணு சிலை மாற்றுப்பாதை வழியில் புறப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான மகா விஷ்ணு சிலை, மாற்றுப்பாதை வழியாக சேத்பட் நோக்கி மீண்டும் புறப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொண்டு செல்லப்படும், பிரமாண்ட மகா விஷ்ணு சிலை, கடந்த 5 நாட்களாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மாநில நெடுஞ்சாலை துறையினரின் அனுமதி கிடைத்ததால், மகா விஷ்ணு சிலை இன்று சேத்பட் நோக்கி புறப்பட்டது.

ஆனால் 420 டன் எடை கொண்ட பிரமாண்டமான மகா விஷ்ணு சிலை, செஞ்சி சேத்பட் சாலையில் உள்ள பாலங்களின் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து இரும்பு பலகை மூலம் தற்காலிக வழி அமைக்கப்பட்டு, அதன் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து மெதுவாக நகர்ந்தது.

சிலை கடந்து செல்வதற்காக, 2 பாலங்களில் ஜாக்கி அமைக்கப்பட்டது. இந்த சிலை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட் அருகே நிறுவப்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version