திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் வெள்ளிமேடு பேட்டை பஜாரில் கட்டடங்களை இடித்த பிரம்மாண்ட சிலை

திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் ஒரே கல்லால் ஆன சிலையால் வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டதால், இழப்பீடு கேட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.

வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து பெங்களூருவுக்கு 66 அடி நீளமும் 26 அடி அகலமும் கொண்ட ஒரே கல்லில் ஆன கோதண்ட ராமர் சிலை கொண்டு செல்லப்படுகிறது.

இந்த சிலை திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டையில் பஜார் வீதி வழியாக சென்றது. ஆனால் கடைவீதி மிகவும் குறுகியதாக இருந்ததால் சிலையை ஏற்றிய லாரி நகர முடியாமல் நின்றது.

லாரி நகர்த்த முயன்ற போதெல்லாம் வீடு மற்றும் கடைகளை சிலை இடித்து நொறுக்கியது. எனவே, கடை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினர்.

 

 

 

Exit mobile version