சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டப்பணிகளை துவங்கி வைக்கிறார்.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் திடலில் அதிமுக தலைமையிலான அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கலந்துக் கொள்ளுகிறார். இந்த விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி சாலைப்போக்குவரத்து, ரயில்வே மற்றும் மின்சக்தி ஆகிய பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்கிறார். குறிப்பாக, அவர் விக்கிரவாண்டி முதல் சோழபுரம் வழியாக தஞ்சாவூர் வரையும், காரைபேட்டை – வாலாஜாபேட்டை இடையே ஆறு வழிச்சாலையையும், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் இடையே நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார். அதேபோல், ஈரோடு – கரூர் – திருச்சி மார்க்கமாகவும் மற்றும் சேலம் – கரூர் – திண்டுக்கல் மார்க்கமாகவும் மின் மயாமாக்கப்பட்ட ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும் பிரதமர் மோடி, எண்ணூர் எரிவாயு முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களிடம் கலந்துரையாடுகிறார்.இதன் தொடர்ச்சியாக சென்னை அடையாறில் உள்ள அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.