7 பேர் விடுதலையில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் : முதலமைச்சர் விளக்கம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும், ஒருவரை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்றார். தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாகவும், திமுக ஆட்சியில் செய்யாததை அதிமுக அரசு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

Exit mobile version