தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு: துணை முதலமைச்சர்

2023ஆம் ஆண்டிற்குள், தமிழகத்தை குடிசையில்லா மாநிலமாக மாற்றுவதே அரசின் இலக்கு என்று, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கேசவ பிள்ளை பூங்கா, கிரே நகர் பள்ளம், பி எஸ் நகர் ஆகிய பகுதிகளில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர், 2023ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் 13 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நீர்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு மாற்றாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Exit mobile version