மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த அரசு அனுமதிக்காது என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார்.
திருவாரூர் அருகே திருக்கரவாசலில் தொடங்கி கரியாபட்டிணம் வரை விளை நிலைங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை கண்டித்து கடந்த 26 தேதிமுதல் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உணவுத் துறை அமைச்சர் காமராஜ் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களையும் விவசாயிகளையும் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என உறுதி அளித்தார்.