அதிகாரிகளை மிரட்டும் திமுக அரசு – நேர்மைக்கு பரிசு பதவி நீக்கமா ?

ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுக்கும் அதிகாரிகளுக்கும், நியாயம் கேட்பவர்களையும் பதவி நீக்கம் செய்யும் திமுக அரசு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தவுடன் பின்வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனுரத்னா, கிராமங்களில் வீடுகளுக்கே சென்று சிகிச்சை கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுப்பவர்.

இந்தநிலையில், மருத்துவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்த அவரை, தலைமை மருத்துவர் பொறுப்பில் இருந்து திமுக அரசு பதிவியிறக்கம் செய்தது. இதற்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன. உடனே அனுரத்னாவுக்கு பழைய பொறுப்பையே வழங்குவதாக அந்தர்பல்டி அடித்தது திமுக.

இதே போன்று, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பள்ளி ஆசிரியர் மகாலட்சுமியை பணியிடை நீக்கம் செய்ததற்கும், சமூக வலைதளங்கள் மூலம் திமுக அரசுக்கு பொது மக்கள் சம்மட்டி அடி கொடுத்தனர்.

கொரோனா காலத்தில் பழங்குடியின பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தார் என்ற காரணத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கும் சமூக வலைதளவாசிகள் வெகுண்டு எழுந்தனர். இதையடுத்து 5 மணி நேரத்தில், பணியிடை நீக்க உத்தரவை திரும்ப பெற்றது திமுக அரசு.

சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளை ஒடுக்குவதும், அலட்சியமாக பணியாற்றும் அதிகாரிகளை காப்பாற்றுவதையே குறிக்கோளாக கொண்டுள்ள திமுக அரசு, இனியாவது சமூக அக்கறையுடன் நடந்து கொள்ளுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Exit mobile version