சாலை பாதுகாப்பில் தமிழக அரசின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை: அமைச்சர் நிதின் கட்கரி

சாலை விபத்துகளை குறைக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பதில் அளித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி , நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காண ரூ.14 ஆயிரம் கோடியில் திட்டத்தை வகுத்துள்ளதாகவும். இதன்மூலம் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார். இத்திட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.சாலை விபத்துகளை குறைக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை. தமிழகத்தில் சாலை விபத்துகள் 15 சதவீதம் குறைந்துள்ளன.மற்ற மாநிலங்களில் 1.5 சதவீதம்தான் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version