கொப்பரைத் தேங்காய்க்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 4.36 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சுமார் 47 ஆயிரத்து 64 லட்சம் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், 2 புள்ளி 06 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒரு கிலோ கொப்பரைத் தேங்காய்க்கு ரூ.82 அடிப்படை ஆதார விலையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த விலையை உயர்த்த விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, கிலோவுக்கு ரூ.90 ரூபாய் முதல் ரூ.95 வரை அடிப்படை ஆதார விலையை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் விலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் அடிப்படை ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.