நபார்டு வங்கியின் உதவியுடன் 13 கோடி ரூபாய் மதிப்பில் பாலாற்றை சீரமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் கீழ் 8 கோடியே 82 லட்ச ரூபாயும், தமிழக அரசின் சார்பில் 4 கோடியே 82 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 13 கோடி ரூபாய் மதிப்பில் பாலாற்றை சீரமைக்கும் திட்டத்தை 2 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மழை நீரை பயன்படுத்தி பாலாற்றுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அளித்த பரிந்துரையை ஏற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.