41 திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்தது தமிழக அரசு!

நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்ட 41 சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளது.

தமிழ் திரைப்படங்களுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும் நடிகர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன் அடிப்படையில் 41 சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை தமிழ்நாடு இசை, இயல், நாடக சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சௌகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், ரவி மரியா, யோகி பாபு உள்ளிட்டோருக்கும்,சின்னத்திரை நடிகர்களான நந்தகுமார், சாந்தி வில்லியம்ஸ், நித்யா ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு, ஐசரி கணேஷ், பின்னணி பாடகர்கள் ஜமுனா ராணி, சுஜாதா, அனந்து மற்றும் இயக்குநர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், லியாகத் அலிகான் இசையமைப்பாளர்கள் தினா, இமான் ஆகியோரும் கலைமாமணி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டை இயக்குநர்கள் தினேஷ், ஜாகுவார் தங்கம் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கேமராமேன் ஆண்டனி, ரகுநாத ரெட்டி, வசன கர்த்தா பிரபாகர், காமகொடியன், காதல் மதி, புகைப்பட கலைஞர் சிற்றரசு, ஒப்பனை கலைஞர்கள் சண்முகம், சபரிகிரிசன், ஆடை வடிவமைப்பாளர் ராஜேந்திரன், பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப், மக்கள் தொடர்பு அதிகாரி சிங்கார வேலு மற்றும் இசை கலைஞர்கள் பல்லேஷ், கிருஷ்ணா பல்லேஷ் மற்றும் பிரசாத் மெல்லிசை கலைஞர் கோமகன் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version