புதிய தீவிரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தனிநபர்களையும் தீவிரவாதிகளாக அறிவிக்கும் சட்டத்திருத்தத்தை நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிராக தனியார் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த சட்டத்திருத்தம் இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மத்திய அரசு விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு உத்தரவிட்டனர்.