அரசு வேலைக்காக காத்திருக்காமல், சுய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு அரசு உதவி செய்ய தயாராக உள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் இளநிலை பட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து, முதுகலை படிப்புகளுக்கான மீன்வள உயிர் தொழில்நுட்ப நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகளவில் மீன்வளப் பல்கலைகழகத்தில் படிக்க மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறினார். படித்து விட்டு வேலைக்காக காத்திருக்காமல், சுய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு அரசு உதவ தயாராக உள்ளதாகவும், தொழில் முனைவோராக வருவதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை வாய்பை வழங்க முடியும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.