கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதிகமான நிதி ஒதுக்கி பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதில், மாவட்டத்தின் 10 ஆயிரத்து 168 மாணவ, மாணவிகளுக்கு நான்கு கோடியே 2 லட்சத்து 57 ஆரத்து 272 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்ததுடன், கருணை அடிப்படையில் போக்குவரத்துத் துறையினருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். அப்போது பேசிய அவர், உயர் கல்வி பயிலும் மாணவர்களின் சராசரி விகிதம் 49% உயர்ந்துள்ளதாகவும், தொடர்ந்து மாணவ, மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்தி தங்களின் ஆசிரியர்களுக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.