வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தனது இரண்டு மகள்களை அரசு பள்ளியில் சேர்த்துள்ளது அரசு பள்ளிகளின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
சுவால்பேட்டையை சேர்ந்த மருத்துவர் ராவணன். இவரது மனைவி பூங்குழலி பொறியியல் பட்டம் பெற்றவர். இவர்களுக்கு பூந்தளிர் மற்றும் பூந்துளிர் ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களை மருத்துவர் ராவணன் அரசு பள்ளியில் சேர்த்துள்ளார். தனியார் பள்ளிகளை விட சிறந்த கல்வியும், ஒழுக்கமும் அரசு பள்ளிகளில் தான் கிடைப்பதாகவும், இதனால் தனது மகள்களை அரசு பள்ளியில் சேர்த்ததாகவும் மருத்துவர் ராவணன் கூறியுள்ளார்.