தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனைக்கு தினசரி வெளிநோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை எட்டி சாதனை புரிந்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு இணையாக விளங்கும் போடி அரசு மருத்துவமனைப் பற்றி பார்க்கலாம்…
150 நவீன படுக்கை வசதிகள்..
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்..
எக்ஸ்ரே, ஸ்கேன், இசிஜி மற்றும் நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் …
15க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள்…
இப்படி தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருக்கும் இந்த மருத்துவமனை தேனி மாவட்டம் போடியில் அமைந்துள்ள தமிழக அரசு மருத்துவனையாகும்.இங்கு இதுமட்டுமின்றி குப்பையற்ற, சுத்தமும் சுகாதாரத்துடனும் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பிரசவத்திற்கு பெயர்போன மருத்துவமனையாகவும் மாதத்திற்கு சராசரியாக 50 பிரசவங்கள் மற்றும் 65 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றும் வருகின்றன. மேலும் மருத்துவர்கள் தங்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதாகவும் நோயாளிகள் கூறியுள்ளனர்.
ஒரு நாளைக்கு 2 ஆயிரம் புற நோயாளிகள் விரும்பி வருகை தருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாது போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கேரளாவின் போடி மெட்டு மற்றும் மூணாறு ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் வார்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டு தீக்காயத்திற்கு தனி வார்டு உள்ள இந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மிகவும் விரும்புவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இப்படி அரசு மருத்துவமனையை தனியார் மருத்துவமனைக்கு இணையாக உருவாக்கியுள்ளதையடுத்து மக்கள் மீது அரசு கொண்டுள்ள அக்கறையையும் , சீரிய ஆட்சி முறையும் காட்டுகிறது என்று கூறினால் அது மிகையாகாது.