செஞ்சியில் ரமலான் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சந்தையாக செஞ்சி ஆட்டுச் சந்தை விளங்கி வருகிறது. செஞ்சி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடு, செம்மரிஆடு, குரும்பாடு உள்ளிட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இங்கு ஆடுகளை வாங்குவதற்கு தேனி, திண்டுக்கல், கம்பம், வேலுர், ஆம்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து வருவது வழக்கம். ரமலான் பண்டிகை நெருங்குவதால் ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. வெள்ளாடுகள் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து, 7ஆயிரம் ரூபாய் வரையிலும், செம்மறி ஆடுகள் ஜோடி 16 ஆயிரம் ரூபாயிலிருந்து, 18ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Exit mobile version