2022 ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே மத்திய அரசின் லட்சியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ள மோடி, மக்களின் வாழ்வில் சீரிய மாற்றத்தை ஏற்படுத்தி இந்தியாவை உயர்ந்த முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அனைவரோடு இணைவோம், அனைவரும் முன்னேறுவோம் என்ற கனவை நிறைவேற்ற பல முனைகளில் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா 5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சியை அடையவும், நமது இளைஞர்கள் தொழில் புரிந்து உயரிய இலக்கை அடையவும் பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார். வளமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைக்க தொடர்ந்து பாடுபட போவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.