நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வரி வசூலானது நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 11 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 97 ஆயிரத்து 247 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் மாநில ஜி.எஸ்.டி 24 ஆயிரத்து 192 கோடி, மத்திய ஜி.எஸ்.டி 17 ஆயிரத்து 626 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி46 ஆயிரத்து 953 கோடியும் ஆகும். நடப்பு நிதியாண்டில் 11 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.