சேலத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடத்திச் செல்ல முயன்றதாக பெண் ஒருவரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்
சேலம் ஜான்சன் நகர் பகுதியை சேர்ந்த ஜஸ்டின், மகாலட்சுமி தம்பதியின் மகன் சரவணன், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அந்த வழியாக வந்த பெண் ஒருவர் சரவணனை அழைத்துக் சென்றதாக கூறப்படுகிறது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என பதறி போய் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடத் தொடங்கினர். இதையடுத்து சற்று தொலைவில் குழந்தையோடு சென்று கொண்டிருந்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் குழந்தையை மீட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பெண் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.