ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர் சீஸ்பர்கர் சாப்பிட்டு பல்லை உடைத்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
Ada Teaupa என்ற அந்த பெண் தன் மருமகளுடன் சிட்னியில் உள்ள McDonald’s உணவகத்திற்கு சென்றார். அங்கு சிக்கன் மற்றும் சீஸ்பர்கர் ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார்.
சிறிதுநேரத்தில் ஆர்டர் செய்த உணவு வரவே, ஆசையாக அதை சாப்பிட தொடங்கிய Ada Teaupa-வுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சாப்பிட்ட பர்கரில் கடினமான பொருள் வாய்க்குள் இருப்பதை உணர்ந்த அதனை கடிக்க முயற்சிக்க அவரின் பல் உடைந்தது.
உடனடியாக அதனை என்னவென்று பார்த்தபோது பர்கருக்கு உள்ளே கடினமான இரும்பு கம்பி ஒன்று இருந்துள்ளது. இது குறித்து McDonald’s உணவகத்திடம் புகார் அளித்ததாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். மேலும் உணவு பாதுகாப்பு விஷயத்தை நாங்கள் கவனமாக கையாள்வதாகவும் McDonald’s உணவகம் தெரிவித்துள்ளது.