கஜா புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பட்டா இல்லா விட்டாலும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் மதிவாணனின் கோரிக்கைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்து பேசினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், முதலமைச்சர் அறிவிப்பின்படி பட்டா இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.