வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல், 15-ம் தேதி கடலூர் – ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. நேற்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது.
‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் 15-ம் தேதி கரையை கடக்க உள்ளதாகவும், 12-ம் தேதிக்குள், கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.