அமேசான் காட்டுத் தீயை அணைக்க ஜி7 உறுப்பு நாடுகள் உதவும்

அமேசான் மழைக் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய ஜி7 உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஜி7 உச்சி மாநாடு பிரான்சிலுள்ள பையாரிட்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் உலகப் பொருளாதார மந்த நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்குவடார், பொலிவியா, கயானா ஆகிய நாடுகளிலுள்ள அமேசான் மழைக் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய ஜி7 உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

Exit mobile version