மேஜர் சித்ரேஷ் சிங் பிஷ்த்தின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் அஞ்சலி

தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்த மேஜர் சித்ரேஷ் சிங் பிஷ்த்தின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

கடந்த 16ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை சித்ரேஷ் சிங் பிஷ்த் தலைமையிலான குழுவினர் செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கண்ணிவெடி செயலிழக்கப்பட்ட நிலையில் மற்றொரு கண்ணிவெடி எதிர்பாராதவிதமாக வெடித்ததில் சித்ரேஷ் சிங் பிஷ்த் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சித்ரேஷ் சிங் பிஷ்த்தின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராணுவ வீரர்களும் பொதுமக்களும் இறுதி மரியாதை செலுத்தி, பாகிஸ்தானுக்கு எதிராகவும் முழக்கமிட்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.

Exit mobile version