பாபர் மசூதி வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற தனக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விளக்கம் அளித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், வழக்கு ஜனவரி 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் வழக்கறிஞராக பணியாற்றிய, உச்ச நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து, வெளியேறியுள்ளார்.