ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கிராமத்தில், சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கீழக்கரையில் திருப்புல்லாணியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வந்தது. நிலத்தடி நீர் குடிநீருக்கு ஏற்றதாக இல்லை. இதனால், குடிநீர் பெற பொதுமக்கள் பல கீலோ மீட்டர் செல்ல வேண்டி இருந்தது. ராமநாதபுரம் பெரிய கண்மாயின் உபரிநீர், சேதுக்கரையில் கடலில் கலக்கிறது. அங்கிருந்து இந்த கிராமத்தில் உள்ள இரண்டு குளங்களுக்கு பொதுமக்கள் பங்களிப்புடன் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், நீண்டகால பிரச்சனையாக இருந்த குடிநீர் தட்டுப்பாடு நீங்கியிருக்கிறது.