உலகின் நான்காவது மிகப்பெரிய தீவு தேசம்

இயற்கையை நேசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான கனவு தேசம் மடகாஸ்கர். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள உலகின் நான்காவது மிகப்பெரிய தீவு தேசம்..

லெமூர் பிராணிகள், போபாப் மரங்கள், மழைக்காடுகள், பாலைவனம், மலையேற்றம், நீரில் குதித்து விளையாடுதல் என சுற்றுலாப்பயணிகளின் கனவு தேசமாக விளங்குகிறது மடகாஸ்கர்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள உலகின் நான்காவது மிகப்பெரிய தீவு தேசம். இத்தீவின் வித்தியாசமான காலநிலை, தனித்துவமான பிராணிகள் என , இந்தியப் பெருங்கடலின் அழகிய தீவுகளில் மடகாஸ்கருக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு என்றால் அது மிகையாகாது.

மடகாஸ்கர் ஒரு பல்லுயிர் பெட்டகம். மற்ற கண்டங்களில் இருந்து தனித்து இருப்பதால் இங்குள்ள 90% தாவரங்கள் மற்றும் விலங்குகள் இத்தீவின் அழகு பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது. லெமூர் என்ற பிராணியும், போபாப் என்ற மரமும் இந்நாட்டின் அடையாளங்கள். சொல்லப்போனால், ஒவ்வொரு வகையான போபாப் மரங்களுக்கும் சில தனித்துவமான குணங்களும், பயன்பாடுகளும் உள்ளன என்பதும், சுற்றுலாவில் போபாப் மரங்கள் முக்கிய இடம் வகிக்க காரணம்.

மடகாஸ்கரில் இரண்டு மாறுப்பட்ட காலநிலைகள் நிலவுகின்றன. நவம்பர் முதல் ஏப்ரல் வரை மழை மற்றும் வெயில்காலமாகவும், மே முதல் அக்டோபர் வரை வறட்சி மற்றும் குளிர் காலமாகவும் இருக்கிறது.

இங்குள்ள மரங்கள் மழைகாலத்தில் சுமார் 1,20,000 லிட்டர் நீரை தனக்குள் சேமித்து வைத்துக் கொண்டு வறட்சி காலங்களில் தன்னை தற்காத்துக் கொள்கிறது. மலைகள், மழைக்காடுகள், பாலைவனங்கள், கடற்கரைகள், பவளப்பாறைகள், வளமான சமவெளிகள், கற்பள்ளத்தாக்குகள் என பல்வேறு நிலத்தோற்றங்கள் ஒரே தீவுக்குள் இருப்பது மட்டுமல்ல, அருகருகே இருப்பதும் மடகாஸ்கர் தீவில்தான்.

காடுகளோடு இணைந்த கடல், தெள்ள தெளிவான கடல் நீர், மலைகளை உரசும் கடற்கரைகள், வண்ண வண்ண பறவைகள் ஆகிய அம்சங்கள் மெய்மறக்கச் செய்யும். இயற்கையை காதலித்து, அதை அனுபவிக்கத் துடிக்கும் பயணிகள், வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய இடம் மடகாஸ்கர் என்றே சொல்லலாம்..

Exit mobile version