ஐக்கிய அரபு அமீரக நாடுகளின் தலைமையகமான அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டில் அபுதாபி சென்றபோது இந்துக்கள் வழிபட ஒரு கோவில் கட்ட அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக் கொண்டார். இதற்கு அபுதாபி அரசு சம்மதம் அளித்தது. பின்னர், அபுதாபி-துபாய் நெடுஞ்சாலை அருகே புதிய இந்து கோவிலை கட்ட 14 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்