முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார்

முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் அமமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் முதலமைச்சரை சந்தித்த இன்பத்தமிழன், அவருக்கு பொன்னாடை போர்த்தி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜவர்மன், சந்திர பிரபா ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து இன்பத்தமிழன் வாழ்த்து பெற்றார்.

Exit mobile version