முதுமலை புலிகள் காப்பகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனப் பாதுகாப்புக் குழுவினர் வாகனத்தின் முன்பு புலிகள் நடமாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே அதிகமாக புலிகள் வாழும் பகுதியாக உள்ளது. அங்கு வனத்துறையினர் புலிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் வாகனத்திற்கு எதிரே ஒரே சமயத்தில் 4 புலிகள் வந்து பிரமிப்பை ஏற்படுத்தின. இந்த காட்சிகளை தன்னுடைய கேமராவில் படம் பிடித்த புலிகள் காப்பக புகைப்படக் கலைஞர் அஷ்ரத் நியூஸ் ஜெ நேயர்களுக்காக பிரத்யேகமாக அதை கொடுத்துள்ளார்.