பழநி அருகே, மைவாடி அடர்ந்த வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை, கும்கி யானை உதவியுடன் கட்டுக்குள் கொண்டுவர வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்த சின்னதம்பி யானையை வனத் துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். இருப்பினும் அது தப்பி இரு நாட்களாக ஆனைமலை, உடுமலை பகுதிகளில் உலா வருகிறது. பழநி அருகே அமராவதி வனப்பகுதி மடத்துக்குளம், மைவாடி பகுதியில் சின்னதம்பி யானை முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தியது. யானையின் உடலில், ‘ரேடியோ காலர்’ பொருத்தப்பட்டுள்ளதால், அதன் இருப்பிடத்தை, உடனடியாக வனத்துறையினர் அறிந்து வருகின்றனர்.தற்போது, மைவாடி வனப் பகுதியில் சுற்றித் திரியும் சின்னதம்பியை, டாப்சிலிப்பில் இருந்து கொண்டுவரப்பட்ட கலீம் என்ற கும்கி யானை உதவியுடன், 80 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.