நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறிக்க தொடங்கி இருப்பது ரம்மியமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் கூந்தன்குளத்தைச் சுற்றியுள்ள கூந்தன்குளம், ஆறுமுகநேரிநிலையம், கன்னங்குளம், காடான்குளம் உள்ளடக்கிய சுமார் 129 ஏக்கர் பகுதி கூந்தன்குளம் பறவைகள் சரணலாயமாக கடந்த 1994ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. வட்டமடிக்கும் பறவைகள் தற்போது கூடு கட்டி குஞ்சு பொறிக்க தொடங்கி உள்ளன. ஆண்டுதோறும் ரஷ்யா, ஆஸ்திரேலியா, சைபீரியா, நைஜீரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து வரும் பறவைகள் இங்குள்ள இதமான சூழலை அனுபவித்து, குஞ்சு பொறித்து, செல்கின்றன. கூளைக்கடா, செங்கால் நாரை, சாம்பல்நாரை, கோணமுக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவாள் முக்கான், டால்மிஷன் என்ற பெலிகன் வகை பறவைகள் இந்தாண்டு அதிகம் வந்துள்ளதாக பறவைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பறவைகள் கூட்டம் அதிகம் காணப்படுவதால், அப்பகுதி மக்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.