திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் மகளிர் சுய உதவி குழு சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பாரம்பரிய உணவுகளான சிறு தானியங்களால் செய்யப்பட்ட பலகாரங்கள், களி, கருவாட்டு குழம்பு, சத்தான சிறு தானியங்கள், சுண்டல், கம்பு, கேழ்வரகு அடை, கொழுக்கட்டை, மூலிகை சூப், எள் உருண்டை, உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய உணவு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கு வந்திருந்த மக்கள் அதனை ஆர்வர்த்துடன் வாங்கி ருசித்தனர்.