போக்குவரத்திற்கு இடையூராக சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினரை கண்டித்து பூ வியாபாரி நிர்வாண கோலத்தில் நின்றதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பூ வியாபாரியான சிவக்குமார் என்பவர், அவர்களிடம் வந்து, ஒரு இலட்சம் சம்பளம் பத்தாதா என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், அவர் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் வந்து பூ வியாபாரி சிவக்குமாரை காப்பாற்றிய் நிலையில், போராட்டகாரர்களை கண்டித்து நிர்வாண கோலத்தில் நின்ற சிவக்குமாரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.