ஊராட்சி துவக்கப்பள்ளி நடைபெற வீடு வழங்கிய பூக்கடைக்காரர்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக தான் புதிதாக கட்டிய வீட்டை கொடுத்த பூக்கடைக்காரரின் செயல் காண்போரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

திருவெறும்பூர் அருகே நொச்சிவயல்புதூரில் ஊராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் கட்டிடங்கள் சிதலமடைந்ததை அடுத்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பள்ளித் தலைமையாசிரியர் கட்டுமானப் பணிகள் முடியும் வரை வகுப்புகள் நடத்துவதற்கு இடம் தேடிவந்துள்ளார். இதையறிந்த அப்பகுதி பூக்கடைக்காரர் சரவணன் தான் புதிதாக கட்டிய வீட்டில் வகுப்புகள் நடத்த இடம் கொடுத்தார். இதற்காக பள்ளி வாடகை தருவதற்கு தயாராக இருந்த போதும் வாங்க மறுத்த அவர் மின்சார செலவுகளை தானே ஏற்று வருகிறார். பூக்கடைக்காரரின் லாபநோக்கமற்ற செயல் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version