மீன் பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15ல் முதல் அமல்

ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன் பிடித் தடைக்காலம் அமலுக்கு வருவதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கடல் ஆராய்ச்சியாளர்களின் அறிவுரைப்படி, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் மீன்இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் மே 31-ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் தடைக்காலம் 61 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு தடைக்காலம் அமலில் இருக்கும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

மீனவர்கள் 14 எச்.பி. என்ஜின் கொண்ட ஃபைபர் படகுகளில் மட்டும் குறிப்பிட்ட தூரம் சென்று, மீன்பிடிக்கலாம். இதுவும் மீனவ பஞ்சாயத்தார்கள் அறிவுறுத்தலின் படியே நடைபெறும். இதற்கு மீனவர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என மீன்வளத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அனைத்து மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்திலிருந்து பெரும்பாலான படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று திரும்புகிறது.

Exit mobile version