வேதாரணியத்தில் வேகமான காற்று வீசுவதால் மீனவர்கள் குறைந்தளவே கடலுக்கு சென்றனர்

வேதாரண்யம் கடற்கரை கிராமங்களில் 7 சென்டி மீட்டர் மழை பெய்து கடலில் வேகமாக காற்று வீசுவதால் குறைந்த அளவு மீனவர்களே கடலுக்கு சென்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள வெள்ளபள்ளம், வானவன், மகாதேவி, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, மணியன் தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 7 சென்டி மீட்டர் மழை பெய்தது. கடலிலும் காற்று வீசுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில், மீன்பிடிக்க குறைந்த அளவு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். காற்றின் வேகம் குறைந்தால் நாளை முதல் கடலுக்கு செல்ல உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version