பொது தேர்தல் வருவதை முன்னிட்டு மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு அதிக தொகை ஒதுக்கீடு செய்தால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்று தர நிர்ணய நிறுவனமான பிட்ச் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிக சலுகைகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018-19ம் நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை இலக்கை, 3.3 சதவீதமாக நிர்ணயித்துள்ளதை குறிப்பிட்டுள்ள பிட்ச் நிறுவனம், மூலதனச் செலவுகள் மற்றும் பணப் பட்டுவாடா நடவடிக்கைகளை மார்ச் மாதத்திற்கு பின்பு தள்ளிவைத்தால், நிதிபற்றாக்குறை இலக்கை எட்டுவது சாத்தியம் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசு, பொதுத்தேர்தலை கருதி, சீர்திருத்த திட்டங்களுக்கு இடமளிக்காமல், கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவித்தால், நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.