இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நியூசிலாந்தில், சுற்றுப்பயணம் செய்துள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் 5 க்கு 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 க்கும் 0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்ல இரு அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். முதல் போட்டி வருகிற 21ஆம் தேதி ஹாமில்டன் நகரில் உள்ள செடான் பார்க் மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி ஏக்லி ஓவல் மைதானத்திலும் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் ஹாமில்டன் நகரில் உள்ள மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.