பிரதமர் மோடி தலைமையில் பிரகதி திட்டத்தின் முதல் ஆய்வுக் கூட்டம்

9 மாநிலங்களில், 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்த, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு பிரகதி திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரகதி திட்டத்தின், நடப்பாண்டின் முதல் ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா உட்பட 9 மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்பட்டு வரும் ஒரு பெட்ரோலிய அமைச்சக திட்டம், 3 ரயில்வே திட்டங்கள் மற்றும் 5 சாலை போக்குவரத்து திட்டங்களில் ஏற்பட்டுள்ள மந்த நிலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தாமதமாக செயல்பட்டு வரும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டார். மேலும், காப்பீடு திட்டங்களான, ”பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா” மற்றும் ”பிரதான் மந்திரி சுரக்ஷா பிமா யோஜனா” குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
 

Exit mobile version