சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாக பணிகள் இன்று முதல் தனியார் மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, உள்ளிட்ட இரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இன்று முதல் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நிர்வகிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிரந்தர பணியாளர்களாக உள்ள நிலைய கட்டுப்பாட்டாளர்கள், அவர்களுக்கு வழி காட்டுவதுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரும்பாலான பணிகள் தனியார் வசம் இருந்த நிலையில் தற்போது ரயில் இயக்குநர், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பணிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.