தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியது

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ள அரசு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான தீர்மானம் ஜூலை 9ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், லோக் ஆயுக்தா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ள தமிழக அரசு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. லோக் ஆயுக்தா செயலாளர் இயக்குநர், சார்பு செயலாளர் உட்பட 26 பணியிடங்கள் உறுதிசெய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபர்களை லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் தேர்வு செய்வார். தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படும் லோக் ஆயுக்தா அமைப்பு, அரசு சேவைகளில் மக்களுக்கு உள்ள குறைபாடுகளை தீர்க்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version