கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தமிழகத்திற்கான பேருந்து சேவையை கர்நாடக அரசு கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி நிறுத்தியது. தற்போது நோய் பரவலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு பேருந்து சேவையை தொடங்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று முதல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக தமிழகத்தின் வெவ்வேறு இடங்களுக்கு மொத்தம் 250 பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.