பெட்ரோல் டீசல் விலையை எப்போது குறைப்பீர்கள் என கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், அறிவில்லையா என நிதியமைச்சர் சீறியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர்.
தற்போது பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை எட்டியுள்ள சூழலில், எப்போது விலை குறைக்கப்படும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து, சென்னையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, பதிலளிக்க முடியாமல் திணறிய அவர், விலை குறைப்புக்கு தேதி அளித்திருந்தோமா என கேட்டு மழுப்பினார்.
உடனடியாக மற்றொரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதால் எரிச்சலடைந்த அவர், அறிவில்லையா என பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையில் பேசினார்.
செய்தியாளர்கள் இதுகுறித்து மேற்கொண்டு கேள்வி எழுப்பியபோது, உங்களுக்கு கணக்கு தெரியாதா, நீங்கள் பள்ளிக்கு செல்லவில்லையா என அமைச்சர் காட்டமாக பேசியது, பத்திரிகையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.
அமைச்சரின் பதிலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.