மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட, 2083 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அதிகபட்சமாக தென் சென்னை தொகுதியில் 69 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. அப்போது, வேட்பாளர்கள் அளித்துள்ள வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு, நாளை மதியம் 3 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாளை மாலை 4 மணிக்கு மேல், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறதிப் பட்டியலை, தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதன் பின்னர், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெறும்.