இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியீடு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட, வேட்பாளர்கள் தாக்கல் செய்த, வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு, இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு மேல், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை, தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதன் பின்னர், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெறும்.

Exit mobile version